நட்டுவாங்கத்தினை பற்றிய கருத்துக்கள் பலவற்றை சிலப்பதிகாரம் எடுத்துக்கூறியுள்ளது. மேலும் இசையாசான், மத்தள ஆசான் , குழலாசான், போன்ற இசைக்கலைஞர்களது சிறப்பு பற்றிய குறிப்புகள் பல கூறப்பட்டுள்ளன. இவ்வாறான இசைக்கருவிகளும், இசையாசான்களும் நட்டுவாங்கத்திற்கு பிரயோகிக்கப்படும் தாள வகைகளை பற்றியும், தாள வழக்குகள் பற்றியும் சிலப்பதிகாரத்தில் ஒரு எடுத்து காட்டாக சொல்லப்பட்டிருக்கின்றது.
கோவில்களின் திருவிழாக்காலங்களிலும், நித்தியா நைமித்திய பூசைகளின் போதும் ஆடுவதற்காக நடனமாதர்களை பணித்திருந்தார்கள் . இவர்களை பல பெயர்கள் கொண்டு அழைத்தார்கள். அதாவது மாணிக்கத்தார், தலைசேரி பெண்டுகள் , தேவரடியார்கள் போன்றன. 2ம் நந்திவர்மன் காலத்திலேயே முத்தீஸ்வரன் கோவிலில் நடனம் ஆடுவதற்கு 27 ஆண்களும், பெண்களும் நியமிக்கப்பட்டனர். ஆண்கள் தட்டளிவு கலையில் சிறந்து விளங்கினார்கள். தட்டளி என்ற தமிழ் சொல்லுக்கு இரு வேறு கருத்துக்கள் உண்டு. ஓசை எழுப்பும் தட்டு போன்ற இசை கருவிகளையும், காய் தட்டுகளையும் அது குறிக்கின்றது. தட்டு போன்ற மேளத்தை கொட்டியோ, கைகளை தட்டியோ, நடனக்கலையினை இயக்குபவரோ, மேற்பார்வையிடுபவரோ செய்யும் செயலை இது குறிக்கின்றது. இக்காலத்தில் நட்டுவனர் என்பவரே அக் கால தட்டளிவு கொட்டுவார் என அழைக்கப்பட்டிருப்பது புலனாகிறது.
தட்டளிவு கொட்டுவார்கள் ஆயுட்காலம் முழுவதும் கோவில் பணியிலேயே ஈடுபட்டிருப்பார்கள்.அவர்களுக்கு பின் அவரது சந்ததியினர் அப்பணியினை தொடர்வார்கள் என பரதக்கலை பற்றி ஆய்வினை மேற்கொண்ட ரா.கலாராணி கூறுகிறார்.இவற்ற்றை எடுத்து நோக்கும் பொழுது பல்லவர் காலத்தில் தேவரடியார்கள் ஆடுவதற்கு பணியமர்த்தபட்டு அவர்களுக்கு நட்டுவாங்கம் செய்வதற்கு நாட்டிய ஆசிரியர்களும் அமர்த்தப்பட்டனர் என்பது புலனாகிறது.
இதை தொடர்ந்து சோழர், நாயக்கர், மராட்டியர், காலத்தில் நடனத்திற்காக பலர் பணியாற்றியுள்ளனர். தஞ்சை நால்வர் இவற்றில் பெரிதும் பங்காற்றியவர்கள்.பரதநாட்டியத்தில் நட்டுவாங்கம் ஒரு சிறப்பு மிக்க முக்கிய பங்காக காணப்படுகின்றது.இது நடு அங்கம்- நட்டுவாங்கம் என்று பெயர் பெற்றது.
கொட்டு பாதி கூத்து பாதி என்பது உணர்த்துவது கொட்டின்றி கூத்து இல்லை என்பது நடன வழக்கில் உள்ள பழமொழி. .இன்று நட்டுவாங்கத்தை பற்றி ஆய்வு செய்த தஞ்சை பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் இரா.மாதவி கூறுகிறார்.நடன அசைவுகளுக்கு பொருத்தமான வகையில் தாளக்கட்டினால் அடிப்படை பிரமாணத்தை நிலைநாட்டி வரும் ஒரு அங்கமே நட்டுவாங்கம் என சொல்லப்படுகின்றது. ஜதிகள் நாட்டியத்திற்கு ஒரு அழகிய முக்கியமான அங்கம் ஆகையால் இது நட்டுவாங்கம் என பெயர் பெற்றது.நட்டுவாங்கம் செய்பவர் நட்டுவானார். அவருக்கு தாளப்பிடிப்பு இன்றியமையாயதாக இருக்க வேண்டும்.அவரின் இன்னுமொரு பணி ஜதி சொல்லுதல் ஆகும்.தாளத்திற்கேற்ப ஜதிகளை சொல்ல வேண்டும்.இதற்கு மிகுந்த பயிற்சி முக்கியமானதாக காணப்படுகின்றது. ஒரு நடன நிகழ்வை எடுத்து நோக்கும் பொழுது அந்த நடனத்தை லயத்திற்கு ஏற்ப கொண்டு செல்வது நட்டுவனாரின் கடமை ஆகும்.
ஒரு உருப்படியின் அழகானது நட்டுவனாரின் தாளக்கட்டிலே தங்கி உள்ளது .நட்டுவனர் தனது கட்டுக்கோப்பை தாண்டாமல் சரியான பிரமாணத்தில் நிற்கவும் அதே நேரத்தில் பாடுபவர் மற்றும் பக்கவாத்திய கலைஞர்கள் அனைவரும் தாளக்கட்டை மாற்றாது பிரமானத்தில் நிறுத்தி ஒன்று படுமாறு செய்தல் வேண்டும்.நட்டுவாங்கம் செய்வதற்கு நட்டுவ கருவிகள் பெரிதும் பயன்படுகிறது.
1.தட்டுக்கழி
2.நட்டுவாங்க தாளம் (கைத்தாளம்)
சிலப்பதிகாரத்தில் இதனை தாண்டியும் பிடித்து என்று குறிப்பிடுகின்றனர்.பஞ்சமரபில் அபிநய மரபு பிரம்பிலக்கணம் பற்றி கூறுகிறது.நாட்டியம் ஆடும் கால் ஆடுபவரை ஆட்டுவிக்க நட்டுவான் கையில் உள்ள பரத பிரம்பை பற்றியே இங்கு கூறப்பட்டுள்ளது. இது 2% சாண் நீளமுள்ளது. இப்பிரம்பு அளவில் குறைந்தால் கேடு உண்டாகும் என்பது நம்பிக்கை.இதற்கான காரணம் பிரம்பில் கீழ் கண்ட தெய்வங்கள் உறைவதாகும் என்பதே.
முதல் சாண்- சிவன்
அடுத்த சாண்-திருமால்
அடுத்த சாண்-பிரம்மா
தண்டு என்றால் தாளம் முழக்கிக்காட்டும் கோல், தண்டியம் பிடித்தல் என்றால் நடன பயிற்சியின் தொடக்க விழா தண்டியம் செய்வித்தலுக்கு மூங்கிலில் மாலை சூட்டி பொட்டு சந்தனம் பூசி நட்டு வைப்பது மரபு.
[adinserter block=”3″]
நாட்டியத்திற்குரிய முக்கிய கருவி நட்டுவத்தாளமாகும். நடன வகைகட்கும் பாடல்களுக்கும் முழக்கட்டுக்கும் அடிப்படையானது தாளம். இத்தாளத்தில் ஒன்று இரும்பினாலானது. இது இடது கையில் பிடித்த மற்ற தாளத்தினை அணைப்பதாக செயல்படுவது. அதனால் இது அணைப்புத்தாளம் எனப்படும். இதன்விட்டம் 2% முதல் 3 அங்குலம் வரையாக இருக்கும். நடுப்பாகம் ஆழமாகக் குழிந்து விளிம்பு வரை கருகலாக அமைந்திருக்கும். இதன் விளிம்பு அகலமாகவே இருக்கும். குழிப்பகுதியின் மையத்தில் இருக்கும் துளை வழியாக கைபிடிப்பதற்கு ஏற்றவாறு நூல் கயிற்றினால் இறுக்கப்பட்ட கைப்பிடி சுமார் 4 அங்குல நீளத்தில் அமைந்திருக்கும். தாளத்தில் மற்றொன்று வலது கையில் பிடிக்கும் இரும்புத் தாளத்தின் மேல் தட்டும் தட்டுத்தாளமாகும். இது வெண்கல தாளம். இதன் விளிம்பு (உதடு) முதல் குழியாக அமைந்து மத்தியில் உள்ள துளையில் நூற்கையிற்றுக் கைப்பிடி சுமார் 4 அங்குல நீளத்தில் இறுக்கிக் கட்டியிருக்கும். அதன் விட்டம் 1% முதல் 2 அங்குலம் வரையிருக்கும். தட்டும் பொழுது இதன் அதிர்வு இதன் விட்ட அளவு கனம் (thickness) இவற்றை பொறுத்து அமைந்திருக்கும். ஆடலின்போது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தி வழி நடத்திச் செல்வதற்கு உதவியாக இத்தகைய கஞ்சக் கருவிகள் என்னும் தாளக் கருவிகள்
எந்த ஒரு கலையும் தோன்றிய காலத்தில் எவ்வாறு இருந்ததோ அப்படியே இருப்பதில்லை. காலத்தால் புதுப்புது மாற்றங்களைக் காணவே செய்கின்ற. எனினும் மாற்றங்கள் மரபை வளப்படுத்த வேண்டுமே தவிர அதனை முற்றாக மாற்றி விடக்கூடாது.
தற்காலத்தில் பெரும்பாலான நட்டுவனார்கள் வெறும் தட்டுவனார்களாக மட்டுமே செயல்படுகின்றனர். அதிகமான நடன ஆசிரியர்கள் முறையாக பயிற்சி எடுக்காமல் மேடையில் நட்டுவாங்கம் செய்யாமல் கைத்தாளத்தை மட்டும் வெறுமனே தட்டிக் கொண்டே இருக்கின்றனர். இன்று நவீன நாகரீக மாற்றங்களால் பல மேடை நிகழ்வுகள் இறுவெட்டுக்கள் மூலமே நடத்தப்படுகின்றன. இது இலகு வழியாகக்கூட இருக்கலாம். எனினும் இது தொடருமானால் நமது மரபுவழிப்பட்ட ஆடற்கலையின் பாரம்பரியச் சிறப்பியல்புகள் மங்கி காலச் சூழலில் அடியழிந்துபோக வாய்ப்பாகவும் அமைந்துவிடும். பழைமைக்குள் புதுமையைப் புகுத்தல் என்பது மரபை மாற்றுதல் ஆகாது. நமது இன்றைய சந்ததியினர் நாளைய சந்ததியின் வழிகாட்டிகள் என்பதால் பாரம்பரியத்தை முன்னெடுத்தல் அவர்களது கட்டாய கடமையாகவே அமையும்
[adinserter block=”4″]

4 Comments
Ramya
Good. Useful website
kishanyrupan
Thank you 🙂
vicky
நான் ஒரு நாட்டிய கலைஞர் .சிறு வயதிலிருந்து பரதம் கற்றுக் கொண்டேன் .பரதத்தை காதலித்தேன்.என் உயிர்மூச்சாக கருதினேன். 12 வருடமாக பெண் குருவிடமே பரதம் கற்றேன்.இப்பொழுது என்னுடைய ஒவ்வொரு அசைவிலும் பெண்மையை உணர்கிறேன்.என் முகபாவத்தில் நளினம் படர்கிறது. பெண்களின் நாட்டிய உடையிலேயே நாட்டியம் ஆட விரும்புகிறேன.ஆண்மை எனக்கொரு குறைபாடாகவே கருதுகிறேன்.இதற்கு காரணம் நான் நேசித்த நாட்டியம்தானா? யாராவது எனக்கு ஆலோசனை கூறுங்கள்.
kishanyrupan
பரதநாட்டிய கலையில் ஆர்வம் கொண்டு அதனை கற்றுதேர்ந்தமைக்கு எமது வாழ்த்துக்கள்.நீங்கள் பல உருப்படிகளை ஆடும் பொழுதும் அபிநயிக்கும் பொழுதும் பெரும்பாலும் நாயகிக்கான பாவங்களை வெளிப்படுத்த வேண்டி வரும் அது தவிர்க்க முடியாததொன்று.ஆண்கள் நடனம் ஆடும்பொழுது கண்டிப்பாக அதில் ஒரு ஆண்மை புலப்படுத்தல் அவசியமானதாகும்.எனவே நீங்க கராத்தே பயிற்சி நிலையங்களுக்கு சென்று கராத்தே பயில்வதன் ஊடாகவோ அல்லது சில ஆர்மி பயிற்சி ஸ்தாபனங்களில் சேர்ந்து பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை போக்கி கொள்ளலாம்.உங்களுக்குள் ஏற்பட்டுள்ள இந்த மாற்றமானது உங்கள் வருங்காலத்தை பாதிக்கும் என்பதனால் சிந்தித்து செயலாற்றுங்கள்.கடவுள் துணை புரிவர்.