பரதநாட்டியத்தில் நவீனத்துவத் தாக்கங்கள்…

தமிழ் நாட்டின் தொண்மையான கலையான பரதம் தொல்காப்பியர் காலத்தே கூத்து, நாடகம், நாட்டியம், ஆட்டம், ஆடல் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டது. கி.பி 3ஆம் நூற்றாண்டை ஒட்டியதாக மாதவி ஆடிய பதினொரு வகையான ஆடற்கலைகள் இருந்துள்ளமையை சிலப்பதிகாரகாப்பியத்தால் அறியமுடிகின்றது. கூத்தர் விறலியர்கோடியர், பரவையர் மற்றும் இறையடியார்கள் எனப் பொருள்படும் தேவதாசிகள் என்போரால் மரபு சார்ந்து ஆடப்பட்டு வந்த தமிழரது ஒரு நிகழ்த்து கலையாக பரத நாட்டியத்தை நம்மால் குறிப்பிடமுடியும். கி.பி 5ஆம் நூற்றாண்டு முதல் கொண்டு சதிர் எனவும், சோழப்பேரரசு காலத்தில் சின்னமேளம் எனவும் அழைக்கப்பட்டு பின்னர் பரதநாட்டியம் எனும் சிறப்புப் பெறுவதாயிற்று. பரதநாட்டியம் எனும் பெயர் 1935க்கு பிற்பட்ட காலத்தை முக்கியப் படுத்துவதாக அமைகிறது.

இவை செந்நெறிசார்ந்த நடனங்கள் எனவும் பாரம்பரிய நடன வடிவங்கள் எனவும் முத்திரை குத்தப்பட்டன. இவ்வாறு ஒரு வரன் முறைக்குள் ஒழுங்கு படுத்தப்பட்டு, எழுத்து வடிவம் பெற்று, மரபு வழி வந்தநடன வகைகள் பாரம்பரிய நடனங்கள் என்று அழைக்கப்படும். பாரம்பரிய நடனங்கள் சாஸ்திர விதிமுறைகள் தவறாமல் கரனஅங்கஹார – ரேசகவித்தியாசங்களுடன் நிருத்தம் செய்தலே மார்கீயாகும். முற்காலத்தில் தேவதாசிகள் இம் முறையைக் கையாண்டனர். இன்று பல கோயில்களில் உள்ள சிற்பங்களில் நாம் காண்பது இந்த முறையைச் சார்ந்த பாரம்பரிய நடனங்களையேயாகும். பாரம்பரிய நடனம் என்பது மார்க் சாஸ்திரிய நடனமே என இதன் மூலம் புலனாகும். இது பழமையானதும் மரபை அடிப்படையாகக் கொண்டதுமாகும். மேலும் வரையறுக்கப்பட்ட இலக்கணம் எழுதப்பட்டு அதனை பின் தொடர்வதும் கூட் பொதுவாக பாரம்பரிய நடனங்கள் பழைமையானதோடு மரபிலிருந்து சற்றும் மாறுபடாமல் நாட்டிய சாஸ்திரத்தில் பரதர் கூறிய விதிமுறைகளைக் கையாண்டு ஆடும் நடனங்களாகும்.

இந்த பாரம்பரிய நாட்டிய மரபு நெடுங்கால வரலாற்றையுடையது. இக்கால நெடுமையில் அது பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் சந்தித்துள்ளது. மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்த பாரம்பரிய நாட்டியக் கலை ஒரு சமயக் கலையாக உருமாற்றம் பெற்றதுமுண்டு என்றாலும் அது தன்னுடைய வரலாற்றுத் தொடர்ச்சியை இழந்து விடவில்லை. மன்னர்களால் போற்றி வளர்க்கப்பட்ட இந்தப் பாரம்பரிய நடனக்கலை தேவசாசிகள் கைவசம் இருக்கும் வரை அவர்களால் பெரிதும் வளர்க்கப்பட்டே வந்துள்ளது. அவர்கள் இறைவனுக்காக திருமணம் புரியாமல் நாட்டியக் கலையை தொழிலாகக் கொண்டு அதன் மூலம் இறைசேவை செய்தனர். தமிழகக் கோயில்களில் சமயச்

சடங்காகவே தோன்றிய நாட்டியக்கலை நிலையாக வேரூன்றி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தது. காலப்போக்கில் அரசியல் மற்றும் சமூக மாற்றங்களால் நடனக் கலைஞர்களிடையே ஒழுக்கக் கேடுகள் தோன்றின் இது வரலாற்றுச் சான்றுகளில் பதிவு செய்யப்பட்டேயுள்ளது. இதன் பின்னர் இக்கலைகள் கோயில் பிரகாரங்களில் இருந்து வெளி அரங்குகளுக்கு இடம் பெயர்ந்துபோனது. இதன்போது நடனக்கலை உ யர்வு பெறவேண்டுமானால் களைகள் அகற்றப்பட வேண்டும்ட் என்ற ஒலிக்கத் தொடங்கியது. இது நாட்டியக்கலையை அதன் தூய வடிவில் போற்றிப் பாதுகாக்கத் துடித்த துடிப்பின் எதிரொலியாகத்தான் கருதப்பட்டது. நாட்டியக்கலை அதன் தூய வடிவிலேயே ஏற்றம் பெறவேண்டும் எனும் நோக்கமானது தேவதாசி முறை களையப்பட வேண்டும் எனும் பிரதிபலிப்பாய் அமைந்தது. இதன் பின்னர் தேவதாசி முறையும் முடிவுக்கு வந்தது. எனினும் தேவதாசிகளால் போற்றிப் பாதுகாத்து வளர்க்கப்பட்டுவந்த கலை மரபுகளும் நுணுக்கங்களும் மறைந்து போனமை வேதனைக்குரிய உண்மையாகவே கருதப்படவும் செய்கின்றது.

கடந்த 50 ஆண்டுகளாக உயர் குலப் பெண்டிரும் இந்த பாரம்பரிய கலையை கற்க முன்வந்ததால் இந்த நடனக் கலையின் அந்தஸ்து உயர்ந்தது. இவர்கள் தேவதாசிப்பெண்களிடம் இருந்தும் பரம்பரையாக வந்த நட்டுவனார்களிடமிருந்தும் இக்கலையைக் கற்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இதுவே ஒரு பாரியநெருக்கடியில் இருந்து ஆடற்கலையை மீட்டு எடுத்து, எமது பாரம்பரியம் மிக்க தமிழ் நாட்டின் தேசியக்கலையெனும் தகுதியைக் கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டவர்களும் இந்த அற்புதக் கலையைக் கண்டும் அதன் நுணுக்கங்களை அறிந்தும் வியந்தனர்.

பரதம் மக்கள் கலையாக வளத்தெடுக்கப்பட்ட பின்னர் செயல்முறை மாற்றங்களில் நவீனத்துவத்தை தன்னுள் உள்வாங்கியிருப்பதை நம்மால் அவதானிக்க முடிகிறது. எந்த ஒரு கலையும் தோன்றிய காலத்தில் எவ்வாறு இருந்ததோ அப்படியே எல்லாக் காலமும் இருப்பதில்லை. இருக்கவும் முடியாது. தோன்றிய காலம் முதல் இன்று வரை ஒரு கலை தன்னுள் மாற்றங்களைப் பெறவில்லை என்றால் அக்கலையை நிகழ்த்திக் காட்டும் இனம் வளர்ச்சியே பெறவில்லை எனப் பொருளாகும் எனக் குறிப்பிடுகின்றார் நாட்டிய விற்பன்னர் சேஇரகுராமன் கலை என்பது காலத்திற்கேற்றாற் போல் தன்னை மாற்றிக் கொண்டே செயல்படுகிறது. இதன் அடிப்படையில் மரபு தழுவியதாக தஞ்சை நால்வரால் தோற்றுவிக்கப்பட்ட தஞ்சாவூர்ப்பாணி பின்னர் அதன் தொடர்ச்சியாக வந்த கிட்டப்பாபிள்ளையின் தஞ்சாவூர்ப்பாணி, இராமையாப் பிள்ளையின் வழுவூர்ப்பாணி, கந்தையா பிள்ளையின் காஞ்சிபுரப்பாணி, மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் பந்தனை நல்லூர்ப்பாணி என ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்முறைகளை பரதம் உள்வாங்கிக் கொண்டது.

[adinserter block=”3″]

பின்னர் மேற்குறிப்பிடப்பட்ட நான்கு பாணிகளின் விரிவாக்கத்தில் பரதக்கலை அடிப்படைக் கோட்பாடுகளில் இருந்து மாறுபடாமல் பல்வேறு புதுமைகளையும் தன்னுள் இனைத்துக் கொள்ளலானது. இம் முயற்சியின் முன்னோடியாகத் திகழ்பவர் பூரீமதி ருக்மணிதேவி அருன்டேல் இவர் 1935ஆம் ஆண்டு கலாஷேத்திரம் என்னும் நிறுவனத்தைத் தொடங்கி, கோயிலில் ஆடிய சதிரை பரதம் என மாற்றியமைத்து புதிய முயற்சிகளை உருவாக்கினார். இவர் பரதத்தை தஞ்சை நால்வரின் பாணியைப் பின்பற்றி பரவலாக அறிமுகப்படுத்தினார். பரதநாட்டியத்தை ஒரு மார்க்கமாக வைத்து மேடை நிகழ்ச்சிகளை நிகழ்த்தலானார்.

இன்றைய யுகத்தில் எத்துறையினைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தமது துறையில் பழைய பாணியினை தவிர்த்து அதில் புதுமைகளையே கையாண்டு வருகின்றார்கள். அதனையே மக்களும் விரும்பி வரவேற்கின்றார்கள். அதனை அறிந்துகொண்ட ருக்மணி ஆரம்ப காலத்திலேயே நாட்டியத்தில் உடைகளை அறிமுகப்படுத்தி அதில் புதுமையைப் படைத்தார். நடனத்திலும் நாட்டிய நாடகங்களை அறிமுகம் செய்தார். இவர் நடனத்தில் பல புதுமைகளைப் புகுத்தினார். இந்தியாவின் புராண இதிகாசக் கதைகளை முதலில் நாட்டிய நாடகங்களாக வடிவமைத்த பெருமை இவரையே சாரும். இவற்றினுள் முக்கியமாக திருக்குற்றாலக் குறவஞ்சி, சீதாசுயம்வரம், ஆண்டாள் சரித்திரம் போன்ற 20க்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களைக் குறிப்பிடலாம். இந்த நாட்டிய நாடகங்கள் தவிர புதுப்புது பாடல்களுக்கும் அபிநயம் அமைத்துள்ளார். கீர்த்தனையை முதன் முதலில் நாட்டியமாக்கியவரும் இவரே.

ருக்மணியைத் தொடர்ந்து லக்ஷ்மி விஸ்வநாதன் குறிப்பிடத்தக்கவராகின்றார். அவரின் படைப்புக்களில் நந்தனார் சரித்திரம், அஷ்டநாபிகா ராம பக்தி, கிருஷ்ண தரிசனம், சதுரங்கம் போன்ற நாட்டியநாடகங்களைக் குறிப்பிடலாம். இந்திய சுதந்திர பொன்விழா நிகழ்ச்சியில் நிகழ்த்தப்பட்ட சதுரங்கம் நாட்டிய நாடகத்தில் அகிம்சை பெண் உரிமை, சுய மரியாதை சுதேசிக் கொள்கை ஆகிய நான்கு அங்கங்களை விரிவாக சித்திரித்தார். முழுக்க முழுக்க மகாகவி பாரதியார் பாடல்களைக் கொண்டு சமுதாய விழிப்புணர்ச்சி ஊட்டும் சித்திரமாக இதனை வடிவமைத்தார். இதுவும் புதுமையைப் புகுத்திய நடனமாகும்.

அடுத்து குறிப்பிடத்தக்கவராக சந்திரலேகா உள்ளார். இவர் புதுமைப் படைப்புக்களை உருவாக்குவதிலேயே நாட்டமுடையவராகத் திகழ்கின்றார். இவரது படைப்புக்களில் பெண் சம்பந்தமான விடயங்களே முக்கிய பங்கு வகிக்கும். ஆங்கிக, நமஸ்கார், லீலாவதி போன்ற வாழ்க்கை முறையினை வெளிக்காட்டும் மிகச் சிறந்த நவீனத்துவம் மிக்க நாட்டிய நாடகங்களை இவர் படைத்துள்ளார். திருமதி கலாராணியும் ஒரு புதுமைப் படைப்பாளியாகவே கருதப்படுகின்றார். இவரது படைப்புக்களில் விஞ்ஞானக் கண்ணோட்டம் என்ற நாட்டிய நாடகம் மிக முக்கியத்துவமானது. மரபு முறை மாறாது அதேவேளையில் புதுமையான முறையில் இதனை அவர் வடிவமைத்தார். ஹன்சுல் என்ற

இஸ்லாமியப் பெண்ணிற்கு நாட்டிய அரங்கேற்றம் செய்து வைத்து அதில் அல்லா மீது ரேவதி இராகத்தில் அமைந்த பாடலுக்கு அபிநயிக்கவும் செய்தார். முதன் முதலில் பலே நடனத்தையும் பரதநாட்டியத்தையும் கலந்து “ஜனனம் மோட்சம்” என்ற தலைப்பில் வித்தியாசமான நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தினார். கிறிஸ்தவ பாடல்கள்பலவற்றை சப்தம் முறையில் உருவாக்கி சாதி மத நல்லிணக்கத்திற்கு சேவை புரிந்தார். இந்த வரிசையில் அருட்தந்தை பிரான்சிஸ் பீட்டர் பர்போனா அடிகளாரும் முக்கிய இடத்தை வகிக்கின்றார். பரத முத்திரைகளை கையாண்டு இவர் முதன் முறையாக திருச்சபை, பரமபிதா, கிறிஸ்து பரிசுத்த ஆவி, மேரிமாதா, உயிர்த்த கிறிஸ்து ஆகியவைகளுக்கு கை முத்திரைகளை அமைத்தார். இவரின் புதுமைப்படைப்பாகிய நிருத்தியாஞ்சலியை நோக்கின் அது கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றினை சித்திரிக்கும் வடிவில் பரத நாட்டிய நடன முறையில் செய்யப்பட்டுள்ளமை தெரியும். வேதாகமத்தில் இருந்து நல்ல பல கருத்துக்கள் எடுக்கப்பட்டு ஒரு நிகழ்வில் ஆரம்ப நடனம் எவ்வாறு புஷ்பாஞ்சலியில் ஆரம்பிக்குமோ அவ்வாறே ஆரம்பித்து நாட்டிய நாடகத்தின் முதல் பாதிப் பகுதியில் புனித ஸ்டீபன், புனித பவுல் ஆகியோரின் மனமாற்றத்தையும் வெளிப்படுத்தியதோடு சிலுவையில் இரண்டு கள்வர்கள் அறையப்பட்டதையும் அதில் சிறப்பாக சித்திரித்திருந்தார். மேலும் இவர் உருவாக்கிய நாட்டிய நாடகங்களில் மிக முக்கியமான் ஒன்று சிலுவைப் பாதையாகும். இவ் வழிபாட்டு முறையை தான் ஒருவனாகவே நின்று நிகழ்த்தியதன் மூலம் ஒரு புதுமையை இவர் பரதத்தில் படைத்துள்ளார். இப் புதுமைப்படைப்புகள் வரிசையில் அனித்தா ரத்தினம், சுதாராணி ரகுபதி போன்றோரும் சிறப்பிடம் பெற்றவர்களாகின்றனர்.

[adinserter block=”4″]

கீழ்த்திசை நடனம் எனப்படும் நவீனத்துவம் கொண்ட புதுவகை நடனத்தை உருவாக்கிய முன்னோடி உதயசங்கர் என கலாநிதி ராகலாராணி தனது ஆய்வில் கூறுகின்றார். உதயசங்கர் மிகச் சிறந்த நடனக் கலைஞர் மட்டுமின்றி நடன அமைப்பாளரும் கூட இவர் பரதநாட்டியம், ஒடிஸி, கதக், மோகினி ஆட்டம் மற்றும் மணிப்புரி நடனங்களின் தனிச் சிறப்புமிக்க அம்சங்களையும் நுணுக்கங்களையும் ஒன்றிணைத்து நவீன நடனத்தை உருவாக்கியவர். இந்த வகை நடனத்தில் உடலின் சுதந்திர அசைவும் ஆட்டமுமே முதன்மைப்படுத்தப்படுகிறது. இசைக்கேற்ப நடனம் என்ற பழைய நிலை மாறி நடனத்திற்கேற்ப இசை எனும் புதிய முயற்சி பிறந்தது. ஒரு நிகழ்விலே பல்வேறுபட்ட இசைகளை ஒன்றிணைத்து வெளிக்கொணர்ந்தார். எடுத்துக்காட்டாக ஒரு பாடலை நோக்கின் கர்நாடக இசை ஹிந்துஸ்தானி இசை மேலைத்தேய இசை கிராமிய இசை எனப் பல்வேறு இசைகளின் தொகுப்பு அதில் காணப்படும். நடன அமைப்புக்களும் எல்லாவகை நடனங்களின் கலவையாகவே அமையும். இவ்வாறான கலவையே புதுவகை நவீன நடனங்களைச் சிறப்பிற்கும் முக்கிய காரணியாகும். நடனத்தின் உடை அணிகலன்கள் பரத உடையை விட சற்று மாறுபட்டதாகவும் நவீன நாகரிகத்திற்கு ஏற்றாற் போலவும் காணப்படும். இவ்வகையான நடனங்கள் இன்று உலகப்புகழ் பெற்றதில் வியப்பேதும் இல்லை எனலாம்.

இதன் அடிப்படையில் புதிது புதிதாக நாட்டிய நாடகங்களும் சமூக அறிவியல் சார்ந்த நடன நிகழ்ச்சிகளும் உருவாக்கப்படுகின்றன. பின்புலத்தில் வாத்திய இசை மட்டுமே ஒலிக்க தத்துவப் பின்னணி கொண்ட ஒரு சில நடனங்களும் பரிசோதன்ை முயற்சிகளாய் மேற்கொள்ளப்படுகின்றன. புதுமையைப் புகுத்தும் விதமாய் சாஸ்திரிய நடனங்களுடன் கிராமிய நடனங்களைக் கலத்தலையும் இன்று காணலாம். எடுத்துக்காட்டாக தில்லானாவில் கரகம் ஆடுதல் அத்தோடு பரதத்துடன் மேலைத்தேய நடனங்களை ஒரே மேடையில் கலந்து ஆடுதல் போன்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறாகப் பழைமையான – பாரம்பரியம் மிக்க மரபு வழிக் கலைகள் நவீன நடனங்கள் என்ற பெயரில் மக்களது நாகரீக தொழில்நுட்ப வளர்ச்சி

2 Comments

  • AL.Elango

    Really it’s great to read this lines . So much of research and data’s collected by this writer .
    The writer is capable to have a research on our culture .
    All the best ….
    Regards,
    AL.Elango.

    • kishanyrupan

      Thank you so much mama for your valuable time to read and comment

Leave a comment

Minimum 4 characters
WordPress Themes SmartADV – Tooltips, Banners and Popups for WP Smooth Zoom Pan – jQuery Image Viewer SMS Register SMSifyWoo – Send SMS Notification For WooCommerce Social Events for Videos Add-on for Easy Social Share Buttons Social Locker – plugin for WordPress Social Share – Addons for WPBakery Page Builder WordPress Plugin Social Share for Elementor WordPress Plugin Social Share Page Views AddOn – WordPress Social Share top Bar AddOn – WordPress