About Natyabhavanam
Natyabhavanam was established in the year 2019 as a simple portal which aims to serve the needs and requirements of budding artist who are passionate about Bharatanatyam. Mrs Kishany Rupan the founder of natyabhavanam is a classical dance choreographer & teacher with a bachelor's in fine arts from the well acclaimed university of Jaffna and awarded with a kalavithagar accredition from the north Ceylon oriental music society.

Kishany started learing dance at the age of five from one of the renowned teachers of eastern province Mrs. Mathumaiyal Varadharajan. It is under the guidance and motivation of Guru mathumaiyal the passion and dedication towards bharathanatyam and the willingness to learn continued for 15 years. guru Mathumaiyal has been the backbone of hundreds and thousands of artists who has given innumerable performances in concerts all over the world. After being influenced by Mrs Mathumaiyal varadharajan to pursue a degree in bharathanatyam, the teachers and gurus from the ramanathan acamedy of fine arts and an evening course from Mrs Santhini Sivanesan for extensive period of four years gave kishany the knowledge the courage and confidence to learn more...
பரதநாட்டியத்தில் ஆர்வமுள்ள வளரும் கலைஞர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு இணையதளமாக நாட்டியபவனம் 2019 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. நாட்டியபவனத்தின் நிறுவனர் திருமதி கிஷானி ரூபன் ஒரு நடன இயக்குனர் மற்றும் ஆசிரியராக உள்ளார். நன்கு புகழ்பெற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இராமநாதன் நுண்கலை பீடத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் மற்றும் வடஇலங்கை சங்கீத சபையில் இருந்து கலாவித்தகர் அங்கீகாரம் பெற்றவர்.
கிஷானி தனது ஐந்து வயதில் கிழக்கு மாகாணத்தின் புகழ்பெற்ற ஆசிரியர்களில் ஒருவரான திருமதி மாதுமையாள் வரதராஜனிடமிருந்து நடனம் கற்கத் தொடங்கினார். இது குரு மாதுமையாளின் வழிகாட்டுதலிலும் ஊக்கத்திலும் பரதநாட்டியத்தின் மீதான ஆர்வமும் அர்ப்பணிப்பும் மற்றும் கற்றுக்கொள்ள விருப்பமும் 15 ஆண்டுகளாக தொடர்கிறது. இலங்கையில் பல எண்ணற்ற நிகழ்ச்சிகளை வழங்கி நூற்றுக்கணக்கான கலைஞர்களின் முதுகெலும்பாக குரு மாதுமையாள் இருந்து வருகிறார். பரதநாட்டியத்தில் பட்டம் பெற ஆரம்பகர்த்தாவாக இருந்தவர் திருமதி மாதுமையாள் வரதராஜன், இராமநாதன் நுண்கலைபீடத்தின் நடனத்தில் பாண்டித்தியம் பெற்ற பல குருக்களின் ஆசிகளை பெற்றும்,அவர்களிடம் நடத்தையும் கற்றவர்.மற்றும் யாழ்ப்பாணத்தில் புகழ்பூத்த பழம்பெரும் கலைஞரான திருமதி சாந்தினி சிவனேசனிடமிருந்து மாலை பாடநெறியாக நான்கு ஆண்டுகளாக விரிவான பரதநாட்டிய கற்றலை மேற்கொண்டுள்ளார்.மேலும் இவர்கள் அனைவரும் கிஷானிக்கு நடனத்தில் நுணுக்கங்களையும் அவற்றில் இருந்து அறிவைக் கற்றுக்கொள்வதற்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் அளித்தவர்கள்.
மேலும் பரத நாட்டியத்தை பற்றிய நூல்கள் மிக அரிதாகவே எம்மிடத்தில் உள்ளன. அவை எல்லோரிடத்திலும் , எல்லா இடத்திலும் பரவலாக காணப்படுவதில்லை. எனவே நாட்டிய கலை பற்றிய ஒரு இணையத்தளத்தினை வெளியிட வேண்டும் என்ற நோக்குடன் பத்திரிகைகளிலும் , பல நூல்களில் எழுதி வெளியிடப்பட்ட கட்டுரைகளை மொழி பெயர்த்தும் , ஆய்வு செய்தும் பல புத்தகங்களை உசாத்துணை நூல்களாக கொண்டு சிறிய சிறிய ஆய்வு கட்டுரைகளாக பதிவு செய்து நடனக்கலை மாணவர்களுக்கு உதவியாய் இருக்கும் என்ற நம்பிக்கையில் இதனை உருவாக்கியுள்ளோம். பரதநாட்டிய கலையானது இன்று உலகம் முழுவதும் போற்றும் நுண்கலையாக விளங்குகிறது. இத்தகைய இக் கலையின் நுணுக்கங்களை பற்றி இணையத்தளத்தில் வெளியிடுவதையே நோக்கமாக கொண்டுள்ளோம்.
