தமிழ் நாட்டின் தொண்மையான கலையான பரதம் தொல்காப்பியர் காலத்தே கூத்து, நாடகம், நாட்டியம், ஆட்டம், ஆடல் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டது. கி.பி 3ஆம் நூற்றாண்டை ஒட்டியதாக மாதவி ஆடிய பதினொரு வகையான ஆடற்கலைகள் இருந்துள்ளமையை சிலப்பதிகாரகாப்பியத்தால் அறியமுடிகின்றது. கூத்தர் விறலியர்கோடியர், பரவையர் மற்றும் இறையடியார்கள் எனப் பொருள்படும்…
நட்டுவாங்கத்தினை பற்றிய கருத்துக்கள் பலவற்றை சிலப்பதிகாரம் எடுத்துக்கூறியுள்ளது. மேலும் இசையாசான், மத்தள ஆசான் , குழலாசான், போன்ற இசைக்கலைஞர்களது சிறப்பு பற்றிய குறிப்புகள் பல கூறப்பட்டுள்ளன. இவ்வாறான இசைக்கருவிகளும், இசையாசான்களும் நட்டுவாங்கத்திற்கு பிரயோகிக்கப்படும் தாள வகைகளை பற்றியும், தாள வழக்குகள் பற்றியும் சிலப்பதிகாரத்தில் ஒரு எடுத்து காட்டாக சொல்லப்பட்டிருக்கின்றது.…
