பரதநாட்டியம் என்பது ஒரு சுவாரஸ்யமான நடன வடிவமாகும்,இது பல்வேறு வடிவங்கள் மற்றும் பாணிகளால் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு கலை ஆகும், அவை நிருத்தம்,நிருத்தியம்,நாட்டியம்,ராகம், பாவம்,மற்றும் தாளம் என்று பல உட்பிரிவுகள் காணப்படுகின்றன.இவை அனைத்தும் ஆக்கப்பூர்வமாக கலந்து பல வகை பாணிகள் உருவாகியுள்ளது.இவை ஒவ்வொன்றும் தனித்துவமானது.
1. பந்தணைநல்லூர் பாணி
பந்தணைநல்லூர் பாணி மற்றும் தஞ்சாவூர் பாணி ஆகியன தஞ்சாவூர் அரச மன்றத்தின் நடனப் பயிற்சியை பற்றி விபரிக்கின்றன.இது தஞ்சாவூர் நாட்டுவனார் குடும்ப வம்சாவளியினரால் பரப்பப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தஞ்சாவூர் அரச மன்றத்தில் 4 சகோதரர்கள் இசைக்கலைஞர்களாகவும் மற்றும் நடன இசையமைப்பாளர்களாகவும் பணியாற்றினர். பந்தணை நல்லூர் மற்றும் தஞ்சாவூர் பாணிகள் பரதநாட்டியத்தில் மிகப் பழமையான சில ஆடல் முறைகளை இன்றும் பேணி வருகின்றன.
மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் பந்தணைநல்லூர் கிராமத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வசித்து வந்தார்(1869-1964) . அதனாலேயே இது பந்தணை நல்லூர் பாணி என்று பெயர் பெற்றது.இந்த பாணியானது ஆழமான உட்கார்ந்த நிலைகளை வலியுறுத்துகிறது மற்றும் செய்ய மிகவும் கடினமாகவும் அமையும். இது அடவுகளை அடிப்படையாகக் கொண்ட முற்றிலும் பெண்ணிய நடன பாணி, மெதுவான மற்றும் முறையான தாள இயக்கங்களில் நிகழ்த்தப்படுகிறது. இது தரையில் ஆழமாக உட்கார்ந்திருக்கும் நிலைகளில் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது, நிற்கும் நிலைகளில் அசைவுகள் மற்றும் நடனமாடும்போது உடலை மிக விரைவாக நகர்த்துவர். இதில் தஞ்சை நால்வரின் 10 பதவர்ணங்கள் காணப்படுகின்றது.அவர்கள் பாணியில் சிறப்பான ஜதிஸ்வரங்களாக வசந்தா,சாவேரி,சக்ரவாகம்,கல்யாணி,பைரவி போன்றவற்றை உள்ளடக்கியது. இந்த பாணியானது அபிநயத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கின்றது.
2. வழுவூர் பாணி
பழைய பந்தணை நல்லூர் வடிவமானது சம்பிரதாயமான அபிநயங்களை கொண்டுள்ளது(அதாவது பண்டைய நூல்களால் அமைக்கப்பட்ட விதிகளுக்கு அமைய).எனவே பார்வையாளர்கள் அதனை மிகவும் பாராட்டினார்கள். வழூவூர் பாணியானது பந்தணை நல்லூர் பாணியின் பிற் பகுதியில் உருவானது.இந்த பாணியானது நாட்டிய சாஸ்திர விதிகளில் இருந்து விலகவில்லை என்றாலும் இந்த இரண்டு பாணிகளின் ஒப்பீட்டளவில் இது மிகவும் யதார்த்தமான அபிநயங்களை கொண்டுள்ளது.இருப்பினும் சில சமகால நடன கலைஞர்கள் இன்று இடைநிலை துணை பாணிகளை இதனூடே உருவாக்கி உள்ளனர். இந்த நாட்டிய பாணியானது மிக பிரபல்யமாக காணப்படுகின்றது.இது வழுவூரின் இறைவனானான சபேசரை பற்றி புகழ்ந்து பாடும் தொடயமங்கலத்துடன் தொடங்குகிறது.இது நிலையான தோரணையுடனும் தாளக்கட்டுடன் செய்யப்படுகின்றது எனினும் பெரும்பாலான தில்லாணாக்களில் அதனை கடந்து பல்வேறு தாளங்களை சேர்த்து இடை இடையே பல விதமான தாள ஜதிகள் சேர்க்கப்படுகின்றது. ஜதிகளுக்கு அதிகமான கோர்வைகளும் அதனிடையே இடைவெளிகளும் காணப்படுகின்றன.இது பார்வையாளர்களுக்கு ஆர்வத்தை தூண்டுகிறது .இந்த பாணியில் நடன கலைஞரின் உடலானது இடுப்பில இருந்து சற்று முன்னோக்கி காணப்படுகின்றது. இவற்றில் அடவுகள் சீராக சென்றாலும் வித்தியாசமான திடீர் இயக்கங்களும் இடம்பெறுகின்றது.ஒவ்வொரு ஜதியிலும் அழகான அறுதிகளும், பாய்ச்சல்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இதன் அபிநயத்தின் நாட்டிய தர்மியின் நுட்பமானது மிகவும் சிறப்பானதாகவும்,மிகைப்படுத்தப்படாத அபிநயமாக காணப்படுகின்றது. இங்கு லாஸ்யமானது தாண்டவத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றது .
[adinserter block=”3″]
3. மெலட்டூர் பாணி
நிஹரதநாட்டியதி காணப்படும் மெலட்டூர் பாணியானது பெரும்பாலும் தேவதாசி மரபுகளில் இருந்தும், ஸ்ரீ வித்திய உபாசனத்தை தொடர்ந்து ஒரு சன்னியசியான மாங்குடி துரைராஜ அய்யர் (1900 – 1980) மூலமாகவும் மெலட்டூர் பாகவதமேளா உருவாக்கபட்டது.இவர் குச்சுப்புடியில் இருந்து இதற்கான சுத்த நிருத்தத்தை உருவாக்கினார்.( இது சிக்கலான தட்டுகளையும் வெவ்வேறு தாளக்கட்டுகளையும் கொண்டது) சேயூர் செங்கல்வராயர் கோயிலில் தேவதாசி ஒருவரின் நிகழ்ச்சியை பார்த்த பிறகு மான்கூடு துறை ராஜர் சுத்த நிறுத்தத்தின் மீது ஆர்வம் காட்டினார்.இவர் அதனை 71 வகையான பொருள்களுடன் அதனை செய்தாரமற்ற பரதநாட்டிய ஆசான்களை போலல்லாமல் இவர் மனிதர்களை மகிமைப்படுத்தும் கவிதைகளை தவிர்த்தார். ஏனெனில் இதுபோன்று செய்வது ஸ்ரீ வித்திய உபாசனத்தின் ஆன்மீக நடைமுறைகளை அவர் கடைப்பிடிப்பதில் முரணாக இருக்கும் என்பதாகும். இந்த பாணியானது தரையில் கால்களை கடினமாக தட்டுவதை ஊக்கப்படுத்தவில்லை.அதற்கு பதிலாக சலங்கையினை மிக நுணுக்கமான முறையில் தட்டி சத்தம் எழுப்புவதில் மிகவும் திறமையானவர்கள். இதில் ஒரு தனித்துவமான அம்சம் யாதெனில் பஞ்ச நடையும், கதிபேதங்களும் காணப்படும்.உதாரணமாக வர்ணத்தில் இருக்கும் ஒவ்வொரு ஜதியிலும் கதிபேதமானது காணப்படும்.பலவிதமான கோர்வைகளும் இதில் காணப்படும். இங்கு பாகவதமேளாசெல்வாக்கு செலுத்துவதனால் இதில் பலவிதமான கூறுகள் கையாளப்படுகின்றது.இங்கு சிருங்கார ரஸத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.இதில் வருகிற நிருத்த அபிநயமானது மற்ற பாணிகளில் இருந்து வேறுபடுகின்றது.இங்கு வருகின்ற லோக தர்மியும் நாட்டிய தர்மியும் மற்றைய நாட்டிய பாணியில் இருந்து வேறுபடுகின்றது.இந்த பாணியில் ஆடும் நடன கலைஞர்கள் மெல்லிய துணியால் தங்களது இடுப்பை இறுக்கமாக சுற்றி கட்டிருப்பார்கள்.
4. கலாக்ஷேஸ்திரா பாணி
கலாக்ஷேஸ்திரா ருக்மிணி தேவி அருண்டேல்,அவரது கணவர் ஜோர்ச் அருண்டே ல் என்பவர்களால் 1936ம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது.இந்த நிறுவனத்திற்கான கலைப்பணியை தொடர்புகளுக்கு சிறந்த மாணவர்களை மட்டுமல்லாது ஒரு குறிப்பிடத்தக்க ஆசிரியர்களையும் , கலைஞர்களையும் அழைத்து இந்த நிறுவனத்தின் ஒரு பகுதியாக அவர்கள் இருக்க வேண்டும் என்று நினைத்தார். ருக்மிணி தேவிஅவர்கள் 3 ஆண்டுகள் பந்தணை நல்லூர் பாணியை கற்றுக்கொண்டார் .பின்னர் 1936 ம் ஆண்டில் தானாகவே தனது முயற்சியில் கலாக்ஷேஸ்திரா பரதநாட்டிய பாணியை வளர்த்து கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.இதற்காக அவர் குழு நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினார்.
[adinserter block=”4″]
ருக்மிணி தேவி அவர்கள் பரதநாட்டியத்தை ஒரு தூய்மையான காலை வடிவமாக உயர்த்தினார். கடந்த கால பந்தணை நல்லூர் பாணியில் இருந்த ஆட்சேபனைகுரிய கூறுகளை அகற்றினார்.பெரும்பாலும் ஸ்ருங்காரத்தில் காணப்படும் சிற்றின்பத்தை தூண்டக்கூடிய உணர்ச்சி கூறுகளாக எடுப்பு, கழுத்து, உதடு மற்றும் மார்பு அசைவுகளை நீக்கினார்.இது தஞ்சை பாலசரஸ்வதி (1918 -1984 ) மற்றும் தமிழகத்தின் பாரம்பரிய இசை வேளாளர்களாலும் பிரதிநிதிகளால் பகிரங்கமாக விமர்சிக்கப்பட்டது. புதுமையான யோசனைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் பரதநாட்டியத்தை சுத்திகஸ்ரிக்கும் முயற்சியானது எரியும் தங்கத்தின் மீது தாமரை வரைவது போன்றதாகும் என்று பாலசரஸ்வதி கூறினார்.நடனத்திற்கு மக்கள் எதிர் மறையான அர்த்தங்களை வைத்ததனால் பரதநாட்டியம் வீழ்ச்சியடைந்தபோது இந்த புதிய பாணியை ருக்மிணி தேவி அவர்கள் உருவாக்கினார்கள்.இதற்காக கடுமையாகவும் உழைத்தார்.
