பரதநாட்டியமானது பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் ஆடக்கூடிய ஒரு ஆடலாகும்.இவ் இரு பாலாரின் உடலமைப்பு, உடற்தொழிற்பாடு ஆகிவற்றின் அடிப்படையில் வேறுபடுத்தி அறியலாம்.இருப்பினும் இவற்றுள் முக்கியமாக நோக்கப்பட வேண்டியது உடலமைப்பு கொண்டுள்ள வேறுபாடுகள் ஆகும்.
பலமும் உடல் நிறையும்
பெண்களின் உடல் நிறையானது பொதுவாகவே ஆண்களை விட சற்று குறைவாகவே காணப்படுகின்ற ஒன்றாகும்.இதற்கான காரணம் ஆண்களில் சுரக்கப்படுகின்ற ” டெஸ்ரெசோன் “எனும் ஒரு வகையான ஹோர்மோன் ஆகும்.இதனால் அவர்கள் வேகமாக இயங்கும் சக்தி கொண்டவர்களாக காணப்படுகின்றார்கள்.மேலும் அவர்களுக்கு தசை நார்களின் தன்மை அதிகமாக காணப்படுவதன் மூலம் பலனும் அதிகரிக்கின்றது.இதுவே ஆண்கள் பரதநாட்டியத்தில் நிறுத்த பகுதியினை இறுக்கமாக செய்ய உதவுகின்றது.
[adinserter block=”3″]
உயரமும் உடலமைப்பும்
பெண்களுக்கு பொதுவாக தமது 11 வயதில் இருந்து அவர்களின் உயரம் கூடிக்கொண்டு வரும் அதே சமயம் ஆண்கள் பெண்களை விட உயரத்தில் கூடியவர்களாக காணப்படுவார்கள் .பெண்கள் ஆண்களை விட குள்ளமாகவும் அகன்ற கீழ் இடைப்பகுதியை கொண்டவர்களாகவும் இருப்பர்.10-60 வரையுள்ள வயது காலப்பகுதியில் ஆண்கள் நிறையில் 85%-90% வரை பெண்கள் உள்ளனர் .
இவ்வாறான காரணங்களினால் உடல் நிறையில் பெண்கள் ஆண்களை விட குறைவாகயினால் பரதநாட்டிய ஆற்றுகையின் போது அபிநயங்களை அழகாக மட்டுமன்றி இலகுவாகவும் நீண்ட நேரம் ஆற்றுகை செய்ய முடிகின்றது.
உடற்கூற்றியல் வேறுபாடுகள்
இருபாலரின் இடையே உடல் கூற்றியல் வேறுபாட்டின் காரணமாக அவர்களின் உடலியல் தொழில்பாடுகளில் வெளிக்கொணர்வுகளும் வேறுபடுகின்றது.இவ்வாறான வேறுபாட்டின் காரணமாக இருபாலரும் நிருத்தம் ,நிருத்தியம் சிறப்பாக வெளிக்கொண்டுவர முடிகின்றது.பெண்களினிடத்து சில தவிர்க்க முடியாத இயற்கை உபாதைகள் வருவதினால் அவர்கள் அந்த நேரங்களில் மனதளவில் சிறிது தயக்கத்துடனே காணப்படுவார்கள்.அதே சமயம் உடலிலும் பல மாற்றங்கள் ஏற்படுவதினால் அவர்களால் தொடர்ந்து ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே மாதிரியாக செயற்பட முடிவதில்லை.இப்படிப்பட்ட சமயங்களில் அவர்கள் மனதளவில் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றார்கள்.
குருதிச்சேர்க்கைகள்
ஆண்களின் 100மில்லி குருதியில் பெண்களை விட 15% அதிகமான ஹீமோகுளோபின் சேர்வையைக் கொண்டிருப்பதுடன் ஆண்கள் ஒரு காண மில்லி மீற்றர் தசை நாரில் 6%பெண்களைவிட அதிகாமாக செங்குருதிச்சிறுத்தட்டுகளை கொண்டிருப்பர்.இவ்வாறான காரணங்களினால் பிராணவாயுவின் ஒட்சிசன் கலன்களுக்குள் கொண்டுசெல்லும் அளவு பெண்களைவிட அதிகமாக காணப்படுகின்றது
இதனாலேயே ஆண்கள் பலம் கூடிய,வேகம் கூடிய உடலியல்,ஆடல் வேல்யூஅடுத்தல்களில் அதீத ஆற்றல் கொண்டவர்களாக உள்ளனர்.இதனால் ஆண்களின் நாட்டிய ஆற்றுகையில் கம்பீரமும்,வீரமும் காணப்படும்.பெண்களினால் வெளிப்படுத்தப்படும்சிரிய அபிநய முக வெளிப்பாடுகளையும் மென்மையான உடல் அசைவுகளையும் ஆண்களால் சிறப்பாக மேற்கொள்ள முடிவதில்லை.
[adinserter block=”4″]
இதயத்துடிப்பு வீதம்
ஆண்களை விட இதயத்துடிப்பு வீதம் 5-10 (நிமிடம்) துடிப்பு அதிகமாக் காணப்படுவதனால் பெண்களுக்கு விரைவாகக் களைப்படையும் தன்மை காணப்படுகின்றது.இவ்வாறு களைப்படைவதால் அவர்களினால் சிறிய / நுண்ணிய பாவ , அபிநயங்களை வெளிப்படுத்துவது சில சமயங்களில் கடினமான காணப்படுகின்றது.
இருதயக் குருதி வெளிப்படுத்தல் அளவு
பெண்களுக்கு 1 நிமிடத்தில் இருதயம் வெளியேற்றும் / உடலுறுப்புக்களுக்கு செலுத்தும் குருதியினளவு குறைவாகும்.ஆண்களுக்கு 5.3 லீற்றர் குருதியும் பெண்களுக்கு 4% லீற்றர் குருதியும் வெளிப்படுகின்றது.விரைவானதும் வேகமானதுமான உடலியல் அப்பியாசங்களையோ நாட்டிய ஆடல் வெளிப்படுத்தல்களையோ மேற்கொள்ளும்போது ஆண்களைவிட பெண்கள் விரைவாக கலைப்படைவர்.
இவ்வாறான காரணங்களினால் ஆண் ,பெண் உடலமைப்பு வேறுபாடுகளையும் பரதநாட்டிய ஆற்றுகைத்திறன் வேறுபாடுகளையும் அறிந்து கொள்ள முடிகின்றது.
