அற இலக்கியங்களில் நடனம்

தமிழ் இலக்கியங்கள் கலைத்தொன்மை வாய்ந்தவை மற்றும் செறிவானவை.இவை இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டு காலம் பழமை வாய்ந்தவையாக காணப்படுகின்றது.தமிழில் சங்க கால இலக்கியங்களை கடந்துதான் அற  இலக்கியங்கள் தோற்றம் பெற தொடங்கின.இவற்றில் நடனம் தொடர்பான விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டு இருக்கவில்லை.இதற்கு என்ன காரணம் எனில் சங்க கால வாழ்வியலில் தமிழ்ச்சமூகம் பெற்றிருந்த போர்க்கால வாழ்வு நெறி முறை ஆகும்.

இவ்வாறு போர்க்கால வாழ்வியலில் இருந்து அமைதியான வாழ்வியலை பெறும் நோக்கில் ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்ற காரணத்தால் உருவாக்கிய இலக்கியங்களே அற இலக்கியங்கள் ஆகும்.இவ்வாறு தோன்றிய நூல்களையே பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்று கூறுவார்கள்.அவற்றில் திருக்குறள்,நாலடியார்,நான்மணிக்கடிகை ,இன்னாநாற்பது ,இனியவைநாற்பது,நார்நாற்பது ,களவெளிநாற்பது ,ஐந்தினை ஐம்பது ,ஐந்திணை எழுபது,திணைமொழி ஐம்பது,திணைமாலை நூற்றைம்பது,திரிகடுகம்,ஆசார கோவை ,பழமொழிநானூறு,சிறுபஞ்சமூலம்,முதுமொழி காஞ்சி,ஏலாதி,கைந்நிலை என்பனவாகும்.

[adinserter block=”3″]

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அதிகமான நூல்கள் சமண முனிவர்களால் எழுதப்பட்டமையால் நடனம் பற்றிய விடயங்கள் அருகியே காணப்படுகின்றது.இவற்றில் இருந்து நடனத்தின் ஆடல் முறைமையையோ ,பாடுபொருளாயோ வெளிப்படுத்த முடியாது.அற நூல்களில் முதன்மையானதாக கருதப்படுவது பொதுமறை எனும் திருக்குறளாகும். இதில் ‘நிலையாமை’ எனும் அதிகாரத்தில் 

“கூத்தாட்டு அவைக்கு குழாத்து அற்றே பெரும் செல்வம் போக்கும் அது விளந்ரளத்தற்று ” (குறள் 332 )

இக் குறட்பாவில் “கூத்தாட்டு அவை” என்பதை திருக்குறள் குறித்து நிற்கின்றது. அதாவது வள்ளுவம் தோன்றிய காலத்தில் இருந்தே தமிழர் பண்பாட்டில் கூத்தினை மேற்கொள்ளுவதற்கென்றே “அவை” இருந்ததாக அறியமுடிகின்றது.

“நாலடியார்” எனும் நூலில் “யாக்கை நிலையாமை” எனும் அதிகாரத்தில் ஒவ்வொருமனிதனின் உயிரும் அவரவர் உடலின் கண் நின்று உடலை இயக்கி  கூத்தன் போல செயற்படுகின்றது.எனவே ஆடலை செய்யும் கூத்தன் நாலடியார் தோன்றிய காலத்தில் இருந்தமை தெளிவாகின்றது.இதை 

“தோல் பையுள் நின்று தொழில் அறச் செய்தூட்டும் கூத்தன் புறப்பட்டக்கால் ” (நாலடி 26)

வெளிப்படுத்தி நிற்கின்றது. மேலும்

“வாள் ஆடு கூத்தியார் கண்போல தடுமாறும் தாளார்க்கு உண்டோ தவறு”     (நாலடி 191)

எனும் பாடலடியானது மகளிர்கள் கூத்தாடுதலை மேற்கொண்டனர்.அவர்கள் கூரான வாளின் மேல் நின்றாடும் மகளிரின் கண்களை போன்று வேறு ஏதொன்றிலும் மனத்தை செலுத்தாது இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்து நிற்கின்றது.

கார் நாற்பது எனும் நூலில்

” ஆடும் மகளிரின் மஞ்ஜை அணி கொள் ” (கார் 4)

எனும் அடியின் மூலம் ஆடும் மகளிர்களான நடனப்பெண்கள் பல்வேறு அணிகலன்களை அணிந்து அழகுடன் தோன்றுவர். அது போலவே மயில்களும் இருக்கின்றன என்கின்றது.

[adinserter block=”4″]

ஏலாதி எனும் நூலில் சான்றோர் எங்கெல்லாம் சென்றால் தாழ்வும் அழிவும் வரும் என்பதை விளக்க வந்தவிடத்து..

“கூத்தும் விழாவும் மணமும் கொலைக்களமும் ஆர்த்த முனையில் வேறிடத்தும்-ஒத்தும் ஒழுக்கம் உடையவர் சோலார் செல்லின் இழுக்கம் இழிவும் தரும்”. (ஏலாதி 62)

எனும் பாடல் எடுத்தோதுகின்றது.அதாவது அறிஞர்கள் கூத்து நடைபெறும்.இடத்தினுக்குச் செல்லமாட்டார்கள்.சென்றால் அவர்கள் தாழ்ந்து போவதோடு பொருளையும் இழப்பார்கள் என்கின்றது.

மேற்கூறப்பட்ட விடயங்களினூடாக அற இலக்கியங்களில் நடனம் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள முடிகின்றமை தெளிவாகின்றன.

                                                                                                                  

Leave a comment

Minimum 4 characters
WordPress Themes Ultimate Clipboard and View Shortcode Addon for WPBakery Page Builder Ultimate GDPR & CCPA CMP for WordPress Ultimate GDPR Compliance Plugin for WordPress & WooCommerce Ultimate Reviewer – Elementor & WPBakery Page Builder Addon Ultimate Timeline – Responsive Timeline History Ultimate Video Player Ultimate WooCommerce Tip or Donation Ultimate WordPress Preloader – 99 CSS3 Preloaders Ultimate WP Domain Search Ultra Portfolio – WordPress