Everything about and around this universe resembles beauty one way or other. Art is beauty & beauty is art. Bharatanatyam and Make up are invariably interconnected in the same way how these terms art, beauty and nature are all connected together. Human beings have naturally evolved to a greater extent that it has become a natural instinct to perform an action in a more presentable and beautiful manner. Ancient Indians performed special rituals and wore natural make-ups for hunting. Make-up made them disguise themselves as not living objects to get close to the prey.
It must have all started there and now here we are wearing all possible make up to give away a best possible performance and impress the hundreds and thousands of people in front of us. Wearing a make up to perform a desired task is an art and Make up gives confidence to an artist. Learning to wear a make up is one of the essentials of a Bharatanatyam artist. It is necessary for every artist to understand and choose what costume, ornament, design fits best for them to convey an art as it is not just going to end in attracting a spectator. A real performance affects people.
ஒப்பனை கலைகள்
மனிதனிடம் இயல்பாகவே காணப்படுகின்ற அழகுணர்ச்சியானது எந்த ஒரு விடயத்தை எடுத்து நோக்கும் பொழுது அதனை அழகாக செய்து முடிக்க வேண்டும் என்று அவனது மனமானது எதிர்பார்க்கின்றது.அவ்வாறு தனக்கு பிடித்தமான முறையில் தன் கலையார்வத்தினையும்,செய்திறனையும் வெளிப்படுத்தும் ஒப்பனை கலைஞனின் தொழிட்பாடு மகத்தானது .
”ஆடைபாதி ஆள்பாதி” என்பது பழமொழி. அழகுக்கலை என்பது ஓர் இன்பம் தரக்கூடிய ஒரு கலையாகும்.ஒரு மனிதன் தன்னை அழகுபடுத்தி பார்ப்பதில் திருப்பதி அடைவதோடு அவனது மனதைரியமும் சேர்ந்து திருப்பதி அடைகிறது. அழகுக்கு அழகு கூட்டுவதே ஒப்பனை கலை ஆகும்.இயற்கையில் காணப்படுகின்ற விலங்கினங்களில் மனிதன் மட்டுமே இயற்கை மற்றும் செயற்கைப் பொருள்களை கொண்டு தன்னை அழகுபடுத்திக்கொள்கிறான் . பூர்விக கால மனிதர் ”போன்மை மந்திரம்” என்ற அடிப்படையில் வேட்டைக்குரிய சடங்குகளை நடத்தியபோது தம்மை வேட்டை விலங்குகளாக ஒப்பனை செய்து பாவனை அடிப்படையில் ”வேட்டை நடனம்” நடாத்தியிருக்கிறார்கள் என்பதனை பூர்விக கால சுவர் ஓவியங்கள் பறைசாற்றுகின்றன. பழந்தமிழர்களிடையே ஒப்பனைகலை எவ்வாறு வளர்ந்து வந்துள்ளது என்பதனை பழந்தமிழ் இலக்கியங்கள் ,செய்யுள்கள் ஊடாகவும் நாம் அறிந்து கொள்ளலாம். சங்ககாலத்தில் குரவை கூத்து ஆடும் பெண்டிர் நெய்தல் மலரை ஒத்த வண்ணத்தை தனது கண்களுக்கு பூசியிருக்கின்றார்கள்.தோள்களுக்கு சந்தனம் பூசியழகு படுத்தியுள்ளனர் (ஐங்குறு) ஆடல் மகளிர் ஒப்பனை செய்யப்பட்டு இருந்ததை மதுரை காஞ்சியில் கூறப்பட்டுள்ளது.இவ்வாறு பல பழந்தமிழர் சான்றுகளோடு ஒப்பனை கலையானது காலத்துக்கு காலம் வளர்ச்சியுற்று வந்துள்ளது.
இதன் அடிப்படையில் பரதநாட்டியத்தில் ஆஹார்ய அபிநயம் என்று பிரத்தியேகமாக ஒப்பனை முறைகள் சொல்லப்பட்டிருக்கின்றது. இவற்றுள் அந்த காலம் தொடக்கம் இந்த காலம் வரையில் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. முன்பிருந்த காலங்களில் சதிர் கச்சேரிக்கு மஞ்சள் பூசிய முகத்தில் புருவம் தீட்டி, கண்களில் மை இட்டு ,உதட்டுக்கு சாயம் பூசி ( வெற்றிலை பாகு பூட்டு சிவந்த உதடு ) , திலகம் இட்டு ஆடுபவர்கள் காட்சியளிப்பார்கள். இன்று ஒப்பனை கலையானது அவ்வாறு இல்லாமல் பல மாறுதல்களுக்கு உட்பட்டு உள்ளது. ஆடும் பொழுது எவ்வளவு வியர்வை வெளியேறினாலும் அதில் போடப்படுகின்ற ஒப்பனையானது அழியாமலும் , முகம் வாடாமலும் காட்சியளிக்கக்கூடியதாய் உள்ளது. அவற்றில் சில பேஸ் (base) , ஷேட்ஸ் (shades), பௌடர் (powder) , பான்கேக் (pancake) , பென்சில் , லிப்ஸ்டிக் , திலகம் போன்றன முக ஒப்பனைக்கு பயன்படுத்த படுகின்றன . ஒப்பனை என்பது தனி ஒரு கலை. ஒவ்வொரு நடன கலைஞர்களும் தன்னை தானே ஒப்பனை செய்ய தெரிந்து இருப்பது இன்றியமையாயது ஆகும் .
ஒப்பனைகளுள் அணியப்படும் அணிகலன்களும் ,ஆடைகளும் கூட மிக முக்கியமானதொன்றாக சொல்லப்படுகின்றன. இக்காலகட்டத்தில் அணிகலன்களில் பல வகை வேலைப்பாடுகளுடைய அணிகலன்களும் காணப்படுகின்றன . ஆடைகளிலும் கூட வித்தியாசமான முறைகளில் தைக்கப்பட்டு இப்பொழுது புது பொலிவுடன் காணப்படுகின்றன. அந்த காலத்தில் அணியப்படும் ”பஞ்சகஜம் ” வரையில் நவீனமயப்படுத்தி காணப்படுகின்றது. இவைகளும் கூட ஓர் ஆடல் நர்தகிக்கு இன்றியமையாயததாக காணப்படுகின்றது. இருப்பினும் ஒப்பனை அனைத்தும் மிகவும் பொலிவுடன் காணப்பட்டால் அங்கு நாம் வெளிப்படுத்தப்படும் அபிநயம் , நிருத்த நிருத்தியங்களில் அனைத்திலும் இருக்கும் கவனம் மறைமுகமாக பார்வையாளர்களை தாக்குகின்றது.
