உடல் பருமன் குறைந்து கட்டழகான உடலமைப்பை பெறவேண்டுமா? இதை பயிலுங்கள்!

[adinserter block=”4″]

 உடற்பயிற்சியானது இன்றைய காலகட்டத்தில் மிகவும் கணிசமான முறையில் குறைந்துவிட்ட நிலையில்  இருந்த  இடத்தில் இருந்துகொண்டே முழு வேலைகளையும் செய்துமுடிப்பதற்காக உடலும் உள்ளமும் ஆசைப்படுகிறது. வேலைக்கு செல்லுதல் வீடு திரும்புதல் என்ற ஒரு கால அட்டவணைக்குள் நமது வாழ்க்கை அடங்கி விட்டது. விழாக்களையும்  பண்டிகைகளையும்  கொண்டாடுவதும்  அருகிக்கொண்டு வருகின்றது. சமூக வலைத்தளங்களுக்குள்ளும் தொலைக்காட்சி பெட்டிக்குள்ளும் கணினிக்குள்ளும் நமது உள்ளமானது குடி புகுந்ததனால் சுற்றமும் சூழலும் அந்நியமாகி நாம் உண்டு நமது வேலை உண்டு என்றாகி விட்டது. ஆலயங்களில் கூட மணியடிப்பதற்காக மக்களின் கைகள் அசையவில்லை. மின்சார மணிக்கே இறைவன் அருளும் போய் சேருகிறது. வீட்டிலேயே வங்கி, கணினி கொள்வனவு, உணவு வீட்டை நோக்கி வருதல் போன்ற பல தொழில்நுட்ப வளர்ச்சி நம்மை முடக்கி விட்டது. உறவினர்களிடமும் நண்பர்களிடமும் நேராக சென்று அன்பை பரிமாறி பேசி பழகிய காலம் போய் முகப்புத்தகத்தின் ஊடாக அனைத்து வேலைகளும் முடிந்து விடுகிறது.  பெருந்தெருக்களில் மட்டும் பெரிய பெரிய வாகனங்கள் பறக்கின்றன. இப்படி இருக்க எப்படி உடல் எடையை குறைப்பது?  உணவை விடுத்து உடற்பயிற்சி சாலைகளில் அதிகளவு பணத்தை வீண்விரயம் செய்யாமல் நம் பண்டைய  கலைகள் நம்மை கைவிடவில்லை என்பதை கொஞ்சம் உணருங்கள். சிறிதேனும் உடலை  அசையுங்கள் போதும்!

[adinserter block=”3″]

ஆடல் கலைகளில் பலவகையான பாரம்பரிய நடனங்கள் இருக்கிறது இருப்பினும் பிரத்யேகமாக உடல் எடையை குறைக்க பெண்கள் தற்காலத்தில் மணிப்புரி நடனத்தை கற்கின்றனர். மணிப்பூர் தேசத்தின் பாரம்பரிய நடனமே மணிப்புரி நடனம் ஆகும். இது மணிப்பூர் மாநிலத்தின் அடையாளமாகவும் அம்மக்களின் பழமையையும் பண்பாட்டையும் பறைசாற்றும் கருவியாக திகழ்கிறது. இந்த நடனம் தற்பொழுது கொல்கத்தா,மும்பை,டெல்லி போன்ற இடங்களிலும் புகழ் பெற்று வருகின்றது.இது கோபியர்களால் நடத்தப்பட்டு வந்தது என்று கூறுவார்கள்.இதில் பார்க்க எல்லாம் பொதுவான அசைவுகளாக இருக்கும் என்றாலும் மிகவும் நளினமான பாவனைகளை உடையது. இந்த நடனத்தை ஆடுவோர் அணிந்திருக்கும் உடைகளும் வித்தியாசமான தோற்றத்துடன் காணப்படும். வயிற்று பகுதி தசையை குறைக்கும்  வல்லமையும்  தசை  நார்களை உறுதியாக்கும் திறனும் கொண்டுள்ளது. சிலவகை உடற்பயிற்சியை செய்த பின்னரே மணிப்புரி நடனத்தை கற்று கொடுக்கின்றனர் நிபுணர்கள். இதில் பொதுவாக பாதங்களை எப்பொழுதும் சேர்த்தும் முழங்கால் வளைந்தும் வைக்கப்பட்டு செயல்படுவார்கள். உடம்பின் செய்கை அலைபோல எழும்பியும், பாம்பு போல்  நெளிந்தும் காணப்படும். இந்த நடனம் கற்பதற்கு மிகவும் எளிதானது. அழகிய ஆரோக்கியமான உடல் அமைப்பு வேண்டுமா? மணிப்பூர் நடனத்தை கற்று கொள்ளுங்கள். தொடர்ந்து ஆடுங்கள் அசையுங்கள். நாட்யபவனத்தின் வாழ்த்துக்கள்! 

Leave a comment

Minimum 4 characters
WordPress Themes Rcwd Sendinblue for Gravity Forms Read Aloud Plugin Real-Time Text-to-Speech for WordPress Real Estate Portal for WordPress Real Physical Media: Physical Media Folders & SEO Rewrites in WordPress Recent Posts For Elementor Rectangle Max (Admob + GDPR + Android Studio) Relayzo – Email Capture Resido – Laravel Real Estate Multilingual System Responsive HTML5 Audio Player PRO WordPress Plugin Responsive Interactive Table